தமிழ்த் திரட்டிகளிலிருந்து விலகுவது எப்படி?

புலிகேசி: லகுடபாண்டி, நாம் தமிழிணையம் பக்கம் வந்து வெகு நாளாகிவிட்டதே..

லகுடபாண்டி(மனதுக்குள்): ஆமாம், ராணியார் வெளியே துரத்தும் வரை அந்தப்புரத்திலேயே பழியாகக் கிடந்தால் இப்படித்தான் ஆகும்..

புலிகேசி(கவனியாமல்): திரட்டிகளில் இப்போதைய ட்ரெண்ட் என்ன?

லகுடபாண்டி: வெயில் காலமாதலால், வறட்டி தட்டுவது போல், நண்பர்கள் மாட்டிக் கொள்ளும் காலத்தில், ஏதேனும் ஒரு திரட்டியைத் திட்டிவிட்டு, வெளியேறுவது தான் இப்போதைய ட்ரெண்டு

புலிகேசி: அட, நன்றாக இருக்கிறதே.. யாரைத் திட்டுவது? மணம் வீசும் தமிழர்களையா? அல்லது குருவிக் கூட்டுக்காரர்களையா?

லகுடபாண்டி: அரசே, நீங்கள் குருவிக்கூடுக்காரர்களைத் திட்டவே வேண்டாம். ஒரே ஒரு பதிவு, ஆதிக்க சக்திகள், பிராமணீயம் என்று எழுதினாலே, அவர்களின் ஜனநாயக திரட்டியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் நீக்கிவிடுவார்கள். அவ்வளவு நல்லதொரு மக்களாட்சித் திரட்டி அவர்களுடையது.

புலிகேசி: அப்படியானால், நமது பதிவுகள் வேறு யாருக்கும் தெரியாமலே போய்விடுமே!

லகுடபாண்டி: ஆமாம். நீங்கள் திட்டினால் பதிவைத் தூக்குவது அவர்கள் ஆரம்பத்திலிருந்தே செய்துவருவது தான். இப்போது திட்டிவிட்டு வெளியே போவது என்பது மணம் வீசும் திரட்டிக்கான ட்ரெண்ட் தான்.

புலிகேசி: ஓ, இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் என் தம்பி போன்ற ரொம்ப நல்ல்ல்ல்லவர்களோ?

லகுடபாண்டி: ஆம் மன்னா.... திரட்டியை விட்டு வெளியேறுவதற்கு முதலடியாக, இவர்களைத் திட்ட வேண்டும். 'திரட்டி நிர்வாகிகளின் தமிழ் புரியவில்லை. தீவிரவாதிகளைப் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்குத் தருவதால், இவர்களும் தீவிரவாதிகள் ஆகிவிடுகிறார்கள். இவர்களைச் சார்ந்து இயங்கும் பூங்காவின் பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு இங்கா என்று பெயர் வைக்காவிட்டால் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது' ... இப்படி ஏதாவது சொல்லித் திட்டலாம்..

புலிகேசி: எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமலே எழுதிய காரணம் போல இருக்கிறதே?

லகுடபாண்டி: மன்னா, நீங்கள் புரிந்து கொள்ள முயற்சித்தால், உங்களுக்கு அறிவுக் கண் திறந்து விடும். அதன்பின் நீங்கள் யாரையும் வீணாக திட்ட முடியாதே! அதனால், அனாவசியமாக புரிந்து கொள்வது என்ற முயற்சிக்கே போகக் கூடாது. யாராவது உங்களிடம் வந்து "புரிந்து கொண்டு கேள்வி கேளேன்!" என்றால், அப்போது "ம்ஹும்.. அவர்கள் தமிழில் எழுதுகிறார்கள், எனக்குப் புரியவில்லை. இந்திய இறையாண்மைக்கு உரிய மொழியான இந்தியிலோ, எங்களவா பாஷையான ஸம்ஸ்கிருதத்திலோ எழுதினால் மட்டும் தான் எனக்குப் புரியும்.", "நான் அமெரிக்காவில் வாழ்வதால், உங்க தமிழ் புரியாது. தமிழ்த் திரட்டியா இருந்தாலும் நீங்க எல்லாருக்கும் புரியுற மாதிரி இங்கிலீஸில் எழுதுங்க.." என்று உதார் விடலாம்.

புலிகேசி: அட! ஆனாலும் அன்னைத் தமிழ் புரியவில்லை என்று சொல்ல, கொஞ்சம் அவமானமாகத் தான் இருக்கிறது..

லகுடபாண்டி: (மனதுக்குள்) இம்சை அரசனுக்கே அவமானமா இருக்கா! இவரே மான வெட்கம் பார்க்காம கரடியிடம் தோற்றுப் போனவர்! இவருக்கே அவமானம் என்றால், இப்போது பேசிக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம் எப்படித் தான் யோசிக்காமலேயே தமிழ் புரியவில்லை என்கிறார்களோ..

புலிகேசி: ஏய், என்ன முணுமுணுப்பு.. நாம் மட்டும் இப்படித் திட்டினால், நம்மை அடுத்தவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?

லகுடபாண்டி: ஒன்றுமில்லை மன்னா.. உங்கள் மான உணர்வை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன்.. என்ன கேட்டீர்கள்? நாம் மட்டும் திட்டினாலா? இன்றைய ட்ரெண்டே இப்படித் திட்டுவது தானே.. அதான் வருகிறவன் போகிறவன் எல்லாம் கேள்விப்பட்டதை, கேள்விப்படாததை என்று எல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்களே.. அந்தச் சுட்டிகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே பதில் வந்துவிட்ட அதில் உள்ள கேள்விகளுக்கு இன்னும் யாரும் பதில் சொல்லவில்லை என்று சத்தம் போட வேண்டும்.. அவ்வளவு தான்.. உங்கள் மதிப்பு ரொம்பவும் உயர்ந்துவிடும்..

புலிகேசி: அப்புறம்?

லகுடபாண்டி: தமிழ்மணம் உங்களுக்கு பட்டி என்று ஒன்று கொடுத்திருக்கும். அதை எடுத்துவிடுவதாகச் சொல்லி எடுத்து விடவேண்டும்.

புலிகேசி: எப்படி எடுக்கவேண்டும்?

லகுடபாண்டி: உங்கள் பதிவின் டெம்ப்ளேட் உரலில் உள்ள,

<!--thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar (c)2005 thamizmanam.com -->
<script language="javascript" src="http://services.thamizmanam.com/jscript.php" type="text/javascript">
</script>
<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com -->

என்ற பகுதியையும்,

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1 (c)2005 thamizmanam.com -->
<b:if cond="'data:blog.pageType">
<script language="javascript" src="'" type="text/javascript" photo="" blogurl=" + data:blog.homepageUrl + " cmt=" + data:post.numComments + " posturl=" + data:post.url + " date=" + data:post.timestamp + ">
</script>
</b:if>
<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com -->

என்ற பகுதியையும், நீக்கிவிட வேண்டும். ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், "thamizmanam" என்றே தேடினாலே கிடைக்கும். இதைச் செய்வதன் மூலம் உங்களின் புதிய பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் தெரியாது.

புலிகேசி: ஆனால், புதுப் பதிவிட்டால், வேறு யாராவது கூட அந்த உரலைத் தமிழ்மணத்தில் சேர்த்துவிட முடியுமே!

லகுடபாண்டி: அங்கே தான் இருக்கிறது விசயம். அதாவது, நீங்கள் வெளியேறி விட்டீர்கள், ஆனா உங்கள் பதிவு ஏன் திரட்டப்படுகிறதென்பது உங்களுக்கே தெரியாது.. எப்படி? ரொம்பவும் சுலபம் இல்லையா?

புலிகேசி: அடப்பாவி! வேறென்ன செய்தால் உண்மையில் வெளியேற முடியும்?

லகுடபாண்டி: தமிழ்மண நிர்வாகிகளுக்கு postadmin@thamizmaNam.com, admin@thamizmaNam.com போன்ற ஐடிகளுக்கு மடல் அனுப்பி தன்னை தமிழ்மணத்திலிருந்து நீக்குமாறு கேட்கலாம். அவ்வாறு கேட்டால் அவர்கள் தங்கள் தகவல்திரட்டிலிருந்து நீக்கி விடுவார்கள். அப்புறம் மீண்டும் பதிந்து கொண்டு தான் வர வேண்டும்.

புலிகேசி: அப்படிக் கேட்காமல் இவர்கள் எப்படி வெளியேறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் லகுடபாண்டி?

லகுடபாண்டி: சும்மா உங்கள் பதிவில் ஒரு இடுகை போட்டு, "என்னை நீக்குங்கள், நீக்குங்கள்...(ஏற்கனவே தாமாக விலகியவர்களின் பதிவுகளைச் சுட்டிக் காட்டி) இவர்களை எல்லாம் நீக்கியது போல் என்னையும் நீக்குங்கள். 24 மணிநேரத்துக்குள் நீக்குங்கள், அல்லது 48 மணிநேரத்துக்குள் நீக்குங்கள், குறைந்த பட்சம் 365 நாட்களுக்குள்ளாவது நீக்குங்கள்" என்று உதார் விடலாம். அப்புறம் நீங்கள் தமிழ்மணத்தில் இல்லை என்றே மக்கள் நினைத்துக் கொள்வார்கள்.

புலிகேசி: அட, இது இன்னும் அழகான யோசனையாக இருக்கிறதே!

லகுடபாண்டி: என்ன மன்னா? தமிழ்மணத்திலிருந்து விலகுவதாக நாமும் ஒரு பதிவு போட்டுவிடுவோமா?

புலிகேசி(யோசித்துக் கொண்டே): அடேய்! என்னை ஏற்கனவே மகாராணி அந்தப்புரத்திலிருந்து விரட்டிவிட்டார்.. திரட்டியிலிருந்தும் விரட்டிவிட்டால் நான் எங்கே போவேன்.. அடேய், யாரங்கே, இந்த லகுடபாண்டியைப் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டு...

(மன்னர் திரும்பவதற்குள் லகுடபாண்டி ஓடித் தப்பிக்கிறார்..)

14 comments:

said...

:))))))))

நல்ல பதிவு. மரமண்டைகளுக்கு புரிஞ்சா சரி.

said...

யூ டூ....


சென்ஷி

said...

நிக்சன், மரமண்டை என்று சொன்ன பின்னால் அதில் புரியவும் புரியும் என்று எப்படி ஐய்யா எதிர்பார்க்கிறீர்?! பரங்கித் தலையர்களே இப்படித் தான்...

சென்ஷி, நாங்கள் லகுடபாண்டி, இம்சை அரசன் இருவரே.. நாம் இருவர், நமக்கு இருவர்

said...

எங்க ஆயாவை ஆஷ் துரை திட்டியதால் தான் நான் ஆஷ் துரையை குருவி சுடும் துப்பாக்கியால் சுட்டேன்.

முடியல. முடியல.

said...

//புலிகேசி: ஓ, இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் என் தம்பி போன்ற ரொம்ப நல்ல்ல்ல்லவர்களோ?
//
:-)))))))))))

said...

新概念Kidult,是Kid和Adult的融合,以保留童心去開拓世界。相比Yuppies裡「 YUP」所指的Young、Urban和Professional,Kidult更貼近網絡裡的坦白和情趣,這裡以Kidkit為名,讓我們以童心出發,尋找關心社情的樂趣。

said...

நான் கேள்விப்பட்டது உண்மைதானா?

said...

ஆஷ் துரை.. என்ன முடியல?

குழலியாரே,
இந்தச் சிரிப்புக்கு என்ன பொருளய்யா?

said...

யாரங்கே! இந்தப் பரங்கையன் ராக்கையும் புரியாத மொழி பேசும் கிட்கிட்டையும் எண்ணைக் கொப்பரையில் போட்டு வருத்து வறுவலாக்கு..

மிதக்கும் வெளியாரே.. நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? உங்களுக்கு எதையும் தாங்கும் இதயமாமே!

said...

//傑仔網誌 said...
新概念Kidult,是Kid和Adult的融合,以保留童心去開拓世界。相比Yuppies裡「 YUP」所指的Young、Urban和Professional,Kidult更貼近網絡裡的坦白和情趣,這裡以Kidkit為名,讓我們以童心出發,尋找關心社情的樂趣。
//

லகுடபாண்டி,
உங்களுக்கு இது புரியாது, ஏனென்றால் தமிழ்மண நிர்வாகத்தின் அறிவிப்பைச் சரியாப் புரிந்துகொண்டீர்களல்லவா?
இதை யாரால் புரிய முடியுமென்றால், தமிழ்மணத்தார் அறிவித்ததைப் புரிய முடியாதவர்களால்.
அது அவர்களுக்கான பின்னூட்டம்தான். எனவே நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம்.

மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான்கூட விலகியவர்களின் இடுகை எப்படி திரட்டியில் வருகிறதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. இதுதானா சங்கதி?

said...

இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க பதிவு.
பதிவுக்கு நன்றி

said...

////Pot"tea" kadai said...
இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க பதிவு.
பதிவுக்கு நன்றி

//

இதை நான் ஆமோதிக்கிறேன்.

said...

//லகுடபாண்டி: என்ன மன்னா? தமிழ்மணத்திலிருந்து விலகுவதாக நாமும் ஒரு பதிவு போட்டுவிடுவோமா?
// அதுக்காகத்தான் இந்த பதிவுன்னு நினச்சேன் - இல்லையா? ;-))

said...

கவிஞர் பாணபத்ர ஓணான்டு வரவில்லையா