புலிகேசி: திடீரென்று அரண்மனையில் யாரடா இத்தனை வெளிச்சமாக்கியது? மன்னன் அயர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது தெரியவில்லை?
லகுடபாண்டி: இல்லை மன்னா, நீங்கள் தூங்குவதற்கு..(புலிகேசி உறுமுகிறார்) ம்ம்.. வந்து, நீங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பது தெரிந்து தான் எல்லா விளக்கையும் அணைத்து வைத்திருந்தோம். எங்கிருந்தோ ஒரு காலில்லா உருவம் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வந்துவிட்டது..
புலிகேசி: ஏ, காலறுந்த கரடியே! எங்கிருந்து வந்தாய்? என்ன வேண்டும் உனக்கு?
ஆன்லைன் ஆவிகள் கேள்விச்சுடரோடு பிரகாசிக்கின்றன:
1. யாரடா அங்கே என்று கூச்சலிட்டால் அந்தப்புறத்தில் மட்டும் அத்தனை பேர் வந்து குவியும் ரகசியம் என்ன?
[மன்னர் லகுடபாண்டியின் காதில் ஏதோ குசுகுசுக்கிறார்: விவகாரமான கேள்வியாய் இருக்கிறது. நீரே பதில் சொல்லும்.]
லகுடபாண்டி: பெண்கள் நாட்டின் கண்கள். கண்களைப் பாதுகாக்கக் காவலர்கள் தேவை. அதனால் தான் எங்கள் அந்தப்புரங்களில் அதிக காவலர்களை வைத்திருக்கிறோம்!
புலிகேசி: ம்ஹும்.. வேறு இடங்களைக் காவல் காக்கச் சொன்னால் ஒரு பயல் இருக்க மாட்டேனென்கிறான்! பேசாமல் ஆவிகளைக் காவலுக்கு அமர்த்திக் கொள்ள வேண்டியது தான்.
2."ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட " என்று தொடங்கும் வாயிற்காப்போனின் வாழ்த்துப் பாவை நீங்களே ஒரு முறை முழுமையாகச் சொல்லுங்கள். பார்க்கலாம்!
புலிகேசி: லகுடபாண்டி, என்ன வார்த்தை சொன்னான், எங்கு சொன்னான், யாவர் முன்னே! இந்த அதிகப் பிரசங்கி ஆவியைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, ஓணாண்டி தண்டனையைக் கொடும்!
லகுடபாண்டி: மன்னா, இந்த ஆவி எப்போதுமே தலைகீழாய்த் தொங்குபவன் தான்.
புலிகேசி: ம்ம்ம்.. அப்படியானால், நேரடியாகத் தொங்கவிட்டு மிளகாயை வாலில் தடவுங்கள்!
3.அழகான மீசையை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?
புலிகேசி:(மீசையைத் தடவிக் கொண்டே): மகிழ்ந்தோம். ஓணாண்டி தண்டனை வேண்டாம். பிழைத்துப் போகட்டும்..
தினசரி குளிக்கும் போது ராணிமார்கள் இருபுறமும் பிடித்து நீவி விட, கொஞ்சம் வாசனைத் திரவியங்களும், சியக்காய் முதலான பல்வேறு மூலிகைத் தைலங்களும் சேர்த்த தண்ணீரில் மீசையை மட்டும் தனியே முழுக்காட்டி அதன் நுனியில் அழகான மல்லிகைகளைச் சூட்டி அவற்றினைப் பராமரித்து வருகிறேன்.
லகுடபாண்டி: மன்னா, வெள்ளை முடி தெரியாதிருக்க, கருப்பு நிற மையையும் பூசுவீர்களே, மறந்துவிட்டதா?
(புலிகேசி முறைக்கிறார்!)
4.சுடர் ஏற்றும் இவ்வேளையில் நாட்டு மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விழைகிறீர்கள்?
புலிகேசி: நாட்டு மக்கள் எல்லாரும் மறக்காமல் சாதிச் சண்டை மைதானங்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். அவ்வப்போது ஏதேனும் சண்டை போடுங்கள். முடிந்தால், என் பதிவில் ஒரு முறை சொல்லிவிட்டுப் போனால், நானும் வந்து சண்டை வேடிக்கை பார்ப்பேன்.
லகுடபாண்டி, அவ்வளவு தானே? முடிந்துவிட்டதா? மீண்டும் நான் சிந்தனையில் இறங்கலாமா?
லகுடபாண்டி: இன்னும் ஒரு வேலை இருக்கிறது மன்னா, நீங்களும் யாரையாவது பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் நாலு கேள்வி கேட்டுவிட்டுத் தூங்க.. ச்ச.. சிந்திக்கப் போக வேண்டும்.
புலிகேசி: நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போலவா? அப்படியானால், நம் கொசுபுடுங்கியைத் தான் கேட்க வேண்டும்.
கொசுபுடுங்கி, இந்தக் கேள்விச் சுடர்களை ஏற்றக் கூடாதா:
1. கொசு புடுங்கி என்ற பெயர் இலக்கணப்படி பிழை இல்லையா? கொசுவை அடிப்பார்கள்.. பிடுங்குவதா?
2. டார்ட்டாய்ஸ், மார்ட்டீன் போன்ற நிறுவனங்களுடன் உங்களுக்குத் தொழில்முறையில் தொடர்புண்டா?
3. பிற பதிவுகளிலிருந்து கொசு பிடுங்கும் போது, அந்தப் பதிவுகளின் சுட்டியைத் தருவது தானே மரியாதை. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
4. நீங்களும் ஒரு போலிப் பதிவர் என்கிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து?
5. கொசு என்று தலைப்பு வைத்துக் கொண்டு ஏன் உங்கள் பக்கத்தில் கரடிகளை அலைய விட்டிருக்கிறீர்கள்
சுடரும் சுடர்சார்ந்த சிந்தனையும்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஆவி : மன்னா!
இ.அ : என்னா?
ஆவி : உடனடியாக சுடரை நாடு கடத்தி விட்டீர்களே! மிக்க மகிழ்ச்சி!
நன்றியும் கூட!
:))
(நல்ல வேளை! ஒரு வழியா வால் தப்பிச்சுதுடா ஆவி)
ஆவி, இன்னுமா நீ போகவில்லை?
யாரங்கே.. சிந்திக்க விடாமல் நிந்திக்கும் இந்த ஆவியை உடனடியாக காடு கடத்துங்கள்!!!!!
நாட்டு பிரஜை: மன்னா, மாமன்னா.. ஆவிகளின் கேள்விகளுக்கு நீங்க அற்புதமாய் பதில் சொல்லிட்டு தூங்க்... சிந்திக்க சென்றுவிட்டீரே! you are genius.. :-P நீங்க சிந்திக்க சிந்திக்கத்தான் அறிவு வளர்கிறதோ?
இங்க பாருங்க: சுடர் கை மாறியதா?
பார்க்க
Post a Comment