ஆனைக் கதை- by பொன்ஸ்(எழுத நினைத்தது)

பொன்ஸக்காவுக்கு பதில் நான் எழுதுகிறேனே என்று வியக்க வேண்டாம்.
அவர் நட்சத்திரமாக பொறுப்பு ஏற்ற திங்கள் கிழமை முதல் பார்த்து வருகிறேன். அவரின் வலைப்பூக்களில் விதவிதமான அலங்காரங்கள். என் அரண்மனையில் அவருக்கு டிஸைனர் வேலை கொடுக்கலாமா எனக்கேட்டு அமைச்சரவை கூட்டத்தினையும் கூட்டினேன். ஆனால்.. அவர் அழைத்து வரும் ஆனைகளுக்கு சாப்பாடு போட்டு கட்டுப்படியாகாது என்பதால், லகுட பாண்டி மறுத்துவிட்டான். அது போகட்டும். தலைப்பிற்கு வருகிறேன்.

பொன்ஸக்காவின் வலைப்பூ தலைப்புகளில் தினம் ஒரு ஆனை அலங்கரிக்கிறது. அது சொல்லும் கதையே தனி.


படம் -ஒன்று:-
இதோ இருக்கிறாளே இவள் பெயர் ஆண்டாள்! படுபயங்கர சுட்டிக்காரி! எல்லோரும் சொல்லிச் சொல்லி பார்த்தும் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தவள்.



படம்- இரண்டு:-
அப்படி அடம் பிடித்தவளிடம் பாசமாக பேசி, அத்தை பார்வதி ஸ்வீட் பாக்ஸை கொடுத்தாள். அதை வாங்கி ருசி பார்த்த ஆள்டாளுக்கு பிடித்துப் போனது. பள்ளிக்கு போகிறேன். இன்னுமொரு பாக்ஸ் வேண்டும் எனக்கேட்க.., அத்தை சொன்னாள். முதலில் நீ பள்ளிக்கு போ, மாலையில் வரும் போது வாங்கித்தருகிறேன்.



படம்- மூன்று:-
அவ்வளவுதான் சைக்கிளில் ஏறிப் பறந்தாள் ஆண்டாள். பாடங்கள் நடத்தப்பட்டாலும் அவள் மனம் அத்தை தரும் ஸ்வீட் பாக்ஸ் பற்றியே இருந்தது. வீட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்டது.



படம்-நான்கு:-

சைக்கிளையும், பாடப்புத்தகங்களையும் பள்ளியிலே விட்டு விட்டு.. ஆடிக்கொண்டே கிளம்பினாள். வீடு நோக்கி...

$$$

அவ்வளவுதாங்க படம் சுட முடிஞ்சது. சுட்ட படத்துக்கு கதை சொல்லியாச்சு. இன்னிக்கு பறக்குற ஆனை படம் போட்டு இருக்காங்க..அதனால கதியில திருப்பம் எல்லம் இருக்கு! :-)) மத்த படங்களையும் பார்த்துட்டு(சேர்த்துட்டு) கதை தொடர்ச்சியைச் சொல்கிறேன்.

$$$$

முதுமலைக்காடு போக வேண்டுமென்று அடம் பிடித்த இளவரசனை (என் மைந்தன்) பொன்ஸ்பக்கங்கள் வலைப்பூவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். அந்த எபக்ட் இங்கேயே கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு! அலைச்சல் குறைந்த மகிழ்ச்சி எனக்கு!!

6 comments:

said...

:)

said...

படம் பார்த்து கதை சொல்றீங்க! நல்லா இருக்கு!

said...

//முதுமலைக்காடு போக வேண்டுமென்று அடம் பிடித்த இளவரசனை (என் மைந்தன்) பொன்ஸ்பக்கங்கள் வலைப்பூவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். அந்த எபக்ட் இங்கேயே கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு! //
அடப்பாவி!!! இதே வேலையாப் போச்சு உனக்கு.. யாருய்யா நீ இம்சை? :)))

said...

:-))

said...

பொன்ஸ். உண்மையிலேயே யாருன்னு தெரியலையா? எனக்குத் தெரியும்ன்னு நெனைக்கிறேன். வழக்கமா யாரைச் சொல்வோமோ அவர் தான். :-)

said...

யோவ் இம்சை உன்னோட பெரிய இம்சையா...
இந்த யானையையெல்லாம் நான் சுட்டு வச்சிருந்தேன். நைட்ல கதை போடலாம்னு நினைச்சேன். நீ முந்திக்கிட்டியே....
சரி வுடு...
நல்ல விஷயத்தை யாரு செஞ்சா என்ன?
அண்ணன் மன்னிச்சிட்டாரு...
இத்தோட தொடர்ச்சியாவது அண்ணன் கிட்ட கேட்டுட்டு பண்ணு.
இல்லின்னா அரை பிளேடு கிட்ட சொல்லி முழு பிளேடு போடச் சொல்லிடுவேன்.