திடீரென்று நேற்று மாலையில் தான் தமிழ்மணத்தில் இருந்து மெயில் வந்தது. நட்சத்திரமாக என்னை தேர்வு செய்திருப்பதாக சொன்னார்கள். ஏற்கனவே தேர்வு செய்திருந்த பதிவரால் இயலாது போனதால் எனக்கு அதிர்ஸ்டம் அடித்திருக்கிறது.
kb கணக்கில் எழுதி வான் வெளில் உலாவ விட்டிருக்கும் பல பதிவர்கள் இருக்க.., எனக்கு இந்த வாய்ப்பு வந்திருப்பது உண்மையில் லகுடபாண்டியின் ஆலோசனை தான் காரணமாக இருக்கும்.
நட்சத்திர வாரத்திற்கான இடுகைகளோடு விரைவில் புரவி ஏறி வருகிறேன்.
*** நட்சத்திரம்***
Posted by இம்சை அரசன் 8 comments
தோசை சாப்பிடுவது எப்படி?
தோசை சாப்பிடுவது எப்படி?
...
...
...
...
...
...
...... என்ற பதிவை எழுதுவது எப்படி?
=> google.com போங்கள்.
=> முதலில் தோசை என்று தட்டி, தேடுங்கள்
=> வருகின்ற முதல் சில பக்கங்களைத் திறந்து அவற்றில் உள்ள விஷயங்களை வெட்டி உங்கள் பதிவில் ஒட்டுங்கள்.
=> அதன்பின் மீண்டும் google.com போங்கள்
=> இந்த முறை தோசை என்று தட்டச்சி, படங்களைத் தேடுங்கள்
=> வருகின்ற படங்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை உங்கள் பதிவில் சேருங்கள். GITS, MTR போன்ற தோசை படம் போட்ட பெட்டிகளாக இருந்தாலும் பரவாயில்லை.
=> இத்துடன் பதிவை பப்ளிஷ் செய்துவிட்டு ஹோட்டலுக்குப் போய் தோசை வாங்கிச் சாப்பிடுங்கள்.
(பி.கு. தோசை என்று தட்டி, எதுவும் வராவிட்டால், dosai என்றோ, thosai என்றோ தட்டி முதலிலிருந்து செய்யவும். )
Posted by இம்சை அரசன் 9 comments
என்னைப் போல் இன்னொருத்தன்
என்னடா இவன் சோகமா இருக்கானேன்னு பார்க்குறீங்களா?
பழைய கதைகள் நியாபகத்துக்கு வந்துடுச்சு. அது தான் சோகமா இருக்கேன். சோபா செட்டு எல்லாம் போட்டு இருந்தாளும் நமக்கு அது ஒத்து வருமா.. அதனால தான் தரையில் படுத்து இருக்கேன்.
என்னோட, அம்மாவும் அப்பாவும் காட்டுல ஜாலியாஇருந்தாங்க! எப்பவுமே கூட்டத்தோட இருந்தாலும், அவங்க காதலிச்சது யாருக்கும் தெரியாது. ஆனா, விஷயத்தை அதிக நாட்கள் மறைச்சு வைக்க முடியவில்லை. அதனால.. யாருக்கும் தெரியாம...
கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கொஞ்ச காலம் ஜாலியா வாழ்ந்து வந்தாங்க!
அவங்களோட மகிழ்ச்சியின் அடையாளமா நான் பொறந்தேன். என்னை மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்க வில்லை. ஒரு வேட்டைக்காரன் அப்பாவை கொன்று போட்டு விட்டான். அம்மாவையும் பிடித்துக்கொண்டு போய் விட்டான்.
அப்பாவை இழந்த வருத்தத்தில் இருந்த அம்மா, அவர்களின் பேச்சை கேட்காமல் அதிகமாய் தொல்லை கொடுத்தாள்.
அம்மாவின் அடாவடியால் அவர்கள்,அம்மாவுக்கு பைத்தியம் பிடித்திருப்பகாகச் சொல்லி சங்கிலியால் கட்டிப்போட்டு, சாப்பாடு கூட கொடுக்காமல், பட்டினி போட்டே கொன்று விட்டார்கள்.
இப்போது தனியாளாய் காட்டுக்குள் சுற்றித்திரிகிறேன். என்னைப்போல் இன்னொருவனின் துணையோடு அந்த கயவர்களை அழிக்க!
-----
குறிப்பு:- பொன்ஸ் அவர்கள் சொன்னது போல இன்று உலக சகிப்புத்தன்மை தினமாம். :-)
Posted by இம்சை அரசன் 4 comments
இட்லி வடை கூட்டணி உடைந்தது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாப் 5 வலைப்பதிவாளர்கள் பற்றி ஒரு பதிவை இட்லிவடையார் வெளியிட்டு இருந்தார். அதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுவீர்களா என்று மிஸ்டர்.வடையிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதோ.............
////ஆட்டைக்கு என்னையு சேர்த்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் வடை!// இட்லியை விட்டுவிட்டீர்களே எங்க கூட்டணிக்குள் குழப்பம் வேண்டாம். இருக்கிற குழப்பமே போதும்.
////
என்று பதில் சொல்லி தங்கள் கூட்டணிக்குள் இருந்த குழப்பத்தை வெளியே கொண்டு வந்து விட்டார் மிஸ்டர்.வடை.
இதனால் கோபமடைந்த இட்லியார் தனியே பிரிந்து போர்டு வைத்து, தன்னை மட்டும் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இனி இட்லிவடை இருவரும் http://idly.blogspot.com, http://vadai.blogspot.com என்று தனித்தனியாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posted by இம்சை அரசன் 5 comments
பொது இடத்தில்..
ஆமாம் மக்களே!!
பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று ஆணை(பொன்ஸ் கவனிக்க:-யாணை அல்ல) பிறப்பித்த பின் நாட்டின் நிலவரம் அறிய, நகர்வலம் வந்தபோது எடுத்த படம் இது.
:-)))
Posted by இம்சை அரசன் 3 comments