என்னைப் போல் இன்னொருத்தன்


என்னடா இவன் சோகமா இருக்கானேன்னு பார்க்குறீங்களா?
பழைய கதைகள் நியாபகத்துக்கு வந்துடுச்சு. அது தான் சோகமா இருக்கேன். சோபா செட்டு எல்லாம் போட்டு இருந்தாளும் நமக்கு அது ஒத்து வருமா.. அதனால தான் தரையில் படுத்து இருக்கேன்.


என்னோட, அம்மாவும் அப்பாவும் காட்டுல ஜாலியாஇருந்தாங்க! எப்பவுமே கூட்டத்தோட இருந்தாலும், அவங்க காதலிச்சது யாருக்கும் தெரியாது. ஆனா, விஷயத்தை அதிக நாட்கள் மறைச்சு வைக்க முடியவில்லை. அதனால.. யாருக்கும் தெரியாம...



கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கொஞ்ச காலம் ஜாலியா வாழ்ந்து வந்தாங்க!

அவங்களோட மகிழ்ச்சியின் அடையாளமா நான் பொறந்தேன். என்னை மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்க வில்லை. ஒரு வேட்டைக்காரன் அப்பாவை கொன்று போட்டு விட்டான். அம்மாவையும் பிடித்துக்கொண்டு போய் விட்டான்.



அப்பாவை இழந்த வருத்தத்தில் இருந்த அம்மா, அவர்களின் பேச்சை கேட்காமல் அதிகமாய் தொல்லை கொடுத்தாள்.



அம்மாவின் அடாவடியால் அவர்கள்,அம்மாவுக்கு பைத்தியம் பிடித்திருப்பகாகச் சொல்லி சங்கிலியால் கட்டிப்போட்டு, சாப்பாடு கூட கொடுக்காமல், பட்டினி போட்டே கொன்று விட்டார்கள்.


இப்போது தனியாளாய் காட்டுக்குள் சுற்றித்திரிகிறேன். என்னைப்போல் இன்னொருவனின் துணையோடு அந்த கயவர்களை அழிக்க!
-----
குறிப்பு:- பொன்ஸ் அவர்கள் சொன்னது போல இன்று உலக சகிப்புத்தன்மை தினமாம். :-)

4 comments:

said...

அடப் பாவி.. இதான்யா என்னோட அடுத்த பதிவு!!! இப்படி நீயே எல்லாத்தையும் போட்டுட்டா எப்படி!!

said...

//அடப் பாவி.. //
நீங்க அப்பாவின்னு இல்லே நினைச்சுக்கிட்டு இருந்தோம்

said...

யாரங்கே....

நமது கொட்டகையில் இருந்து யானைகளை களவாடிச்சென்று பிளாக்கரில் பதிவிட்ட இந்த புலிகேசியை படுக்க வைத்து அவன்மேல் அவனது பிளாக்கரை போர்த்தி நமது யானைகளை அதில் ஸ்கேட்டிங் விளையாடவிடுங்கள். அதில் அவன் மதியானம் சாப்பிட்டது வெளியே பிதிங்கி வர வேண்டும்

:)))))))

said...

கதை அடுத்த பாகம் வரும் போல!!